ஜஹாங்கீர் கலைக்கூடம்
ஜஹாங்கீர் கலைக்கூடம் இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பையில் உள்ள ஒரு கலைக்கூடம் ஆகும். இது கே.கே. ஹெப்பர் மற்றும் ஹோமி பாபாவின் வற்புறுத்தலின் பேரில் சர் கோவாஸ்ஜி ஜஹாங்கீர் என்பவரால் நிறுவப்பட்டது. இது 1952 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. மேலாண்மைக் குழுவால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற இந்த கலைக்கூடம் கட்டுவதற்கான முழுத் தொகையையும் கோவாஸ்ஜி ஜஹாங்கீர் நன்கொடையாக வழங்கினார். இந்த கலைக்கூடம் தெற்கு மும்பையில், இந்தியாவின் நுழைவாயில் அருகே உள்ள, பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் அருங்காட்சியகத்தின் பின்னால் உள்ள காலா கோடா என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இங்கு நான்கு கண்காட்சி அரங்குகள் உள்ளன. இந்த காட்சிக்கூடம் ஜி.எம். பூட்டா மற்றும் அசோசியேட்ஸ் நிறுவனத்திற்காக ஜி.எம். பூட்டாவால் வடிவமைக்கப்பட்டதாகும்.
Read article